Toronto-St. Paul தொகுதிக்கான மத்திய இடைத் தேர்தல் வாக்களிப்பு திங்கட்கிழமை (24) நடைபெறுகிறது.
இந்த தொகுதியில் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் மொத்தம் 84 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Carolyn Bennett பதவி விலகிய நிலையில் இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
மூன்று தசாப்தங்களாக இந்த தொகுதியை Liberal கட்சி பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
இம்முறை Leslie Church, இந்த தொகுதியின் Liberal கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார்.
Conservative கட்சியின் வேட்பாளராக Don Stewart அறிவிக்கப்பட்டுள்ளார்.
NDP வேட்பாளர் Amrit Parhar, பசுமை கட்சி வேட்பாளர் Christian Cullis ஆகியோர் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இந்த இடைத்தேர்தல் Justin Trudeauவின் அரசியல் எதிர்காலத்திற்கான வாக்கெடுப்பாக கருதப்படுகிறது.