கனடாவின் முக்கிய சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar கொலையின் முதலாவது ஆண்டு நினைவு கூறப்பட்டது.
இந்தக் கொலையை கண்டித்து Vancouver நகர இந்திய துணை தூதரகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த கொலையால் சீக்கிய சமூகத்தில் ஒரு ஆபத்தான உணர்வு தோன்றியுள்ளது என ஒரு சீக்கிய இளைஞர் தலைவர் கவலை தெரிவித்தார்.
Hardeep Singh Nijjar கடந்த வருடம் June மாதம் 18ஆம் திகதி British Colombiaவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கில் நான்கு இந்தியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்தக் கொலையில் இந்திய அரசாங்கத்தின் தலையீடு உள்ளதாக கனடிய பிரதமர் Justin Trudeau நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்
ஆனாலும் இந்தக் கொலையில் தமக்கு எந்தவித தொடர்பும் இல்லை என இந்திய அரசாங்கம் மறுத்துள்ளது.