தேசியம்
செய்திகள்

அடமான மோசடி Toronto அலுவலக துப்பாக்கிச் சூட்டுக்கு வழிவகுத்தது?

மூவர் பலியான Toronto அலுவலக துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் அடமான மோசடி காரணமாக உள்ளது என தெரியவருகிறது.

1.28 மில்லியன் டொலர் அடமான மோசடி Toronto அலுவலக துப்பாக்கிச் சூட்டுக்கு வழிவகுத்தது என துப்பாக்கிதாரியின் மனைவி தெரிவித்தார்.

திங்கட்கிழமை (17) Toronto அலுவலகம் ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலியாகினர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 54 வயதான Arash Missagh, 44 வயதான Samira Yousefi ஆகியோர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் அடையாளம் கண்டனர்.

இதில் சந்தேகத்திற்குரிய துப்பாக்கிதாரியாக 46 வயதான Alan Kats என அடையாளம் காணப்பட்டார்.

துப்பாக்கிதாரி Alan Kats அடமான மோசடியில் பாதிக்கப்பட்டவர் என அவரது துணைவி Alisa Pogorelovsky கூறினார்.

Alan Kats சம்பவ இடத்திலேயே தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

இதில் கொல்லப்பட்டவர்கள் வணிக நிறுவனத்தின் இணை உரிமையாளர்கள் என தெரியவருகிறது.

துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இருவரிடமும் தனது கணவர் 1.28 மில்லியன் டொலர்கள் இழந்த பின்னர் வழக்குத் தொடர்ந்ததாக Alisa Pogorelovsky கூறினார்.

துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில், பலியான இருவருக்கு எதிரான வழக்கில் Alan Kats, Alisa Pogorelovsky  ஆகியோர் வாதிகளாக இருந்தனர்.

இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

ஏழு நாட்களில் 109 புதிய COVID இறப்புகள் Ontarioவில் பதிவு

Lankathas Pathmanathan

கனடாவின் Olympic புறக்கணிப்பு ஒரு கேலிக்கூத்து: சீனா விமர்சனம்

Lankathas Pathmanathan

புதிய தொழில் அமைச்சர் பதவி ஏற்பு

Lankathas Pathmanathan

Leave a Comment