September 7, 2024
தேசியம்
செய்திகள்

ரஷ்யர்களுக்கு எதிராக புதிய தடைகளை அறிவித்த கனடா!

13 ரஷ்யர்களுக்கு எதிராக கனடா தடை விதித்துள்ளது.

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரின் மரணத்துடன் தொடர்புடைய குற்றத்திற்காக இந்த தடையை கனடா அறிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் Alexei Navalny, கடந்த February 16ஆம் திகதி சிறைச்சாலையில் மரணமடைந்தார்.

இவர் பொய்யான குற்றச்சாட்டுகளில் சிறை பிடிக்கப்பட்டதாக கனடா கருதுகிறது.

Alexei Navalnyனியின் விதவை Yulia Navalnaya கனடாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த புதிய தடை அறிவித்தல் வெளியானது.

தனது பயணத்தின் போது பிரதமர் Justin Trudeau, வெளியுறவு அமைச்சர் Mélanie Joly ஆகியோரை Yulia Navalnaya சந்திக்க ஏற்பாடாகியுள்ளது.

கனடாவில் புதிதாக தடை உத்தரவு அறிவிக்கப்பட்டவர்கள் உளவுத்துறை, காவல்துறையை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது

Alexei Navalny இறந்த இரண்டு வாரங்களுக்குள் ஆறு ரஷ்யர்களுக்கு எதிராக கனடா தடை அறிவித்தலை வெளியிட்டது

Alexei Navalny யின் மரணம் குறித்த குற்றச்சாட்டுகளை ரஷ்யா மறுத்துள்ளது.

Related posts

Ontarioவில் அதிகரிக்கும் குறைந்தபட்ச ஊதியம்

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 25ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Scarborough Agincourt தொகுதியின் புதிய நகரசபை உறுப்பினர் தெரிவு

Lankathas Pathmanathan

Leave a Comment