Toronto அலுவலகம் ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலியாகினர்.
Don Mills வீதியில் York Mills வீதிக்கும் Lawrence வீதிக்கு இடையில் உள்ள Mallard வீதியில் அமைந்துள்ள அலுவலகம் ஒன்றில் திங்கட்கிழமை (17) மாலை 3:30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இந்த சம்பவம் நிகழ்ந்த அலுவலகத்திற்கு அருகில் ஒரு குழந்தை பராமரிப்பு இல்லம், பாடசாலை ஆகியன அமைந்துள்ளன.
ஆண்கள் கத்தோலிக்க பாடசாலையான Northmount பாடசாலை இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் காரணமாக தற்காலிகமாக பூட்டப்பட்டது.
அதேவேளை St. George குழந்தை பராமரிப்பு இல்லமும் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக பூட்டப்பட்டது.
துப்பாக்கி சூடு நிகழ்ந்த நேரம் 104 குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் இருந்ததாக தெரியவருகிறது.
இந்தச் சம்பவம் குறித்த விசாரணைகள் தொடரும் நிலையில் சந்தேக நபர்கள் குறித்து காவல்துறையினர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.