February 23, 2025
தேசியம்
செய்திகள்

கனடா – இந்தியா பிரதமர்கள் சந்திப்பு

கனடிய பிரதமர் இந்திய பிரதமரை சந்தித்தார்.

கனடிய பிரதமர் Justin Trudeau, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை (14) சந்தித்தார்.

இத்தாலியில் நடைபெறும் G7 நாடுகளின் தலைவர் மாநாட்டில் இரு நாடுகளின் தலைவர்கள் சந்தித்தனர்.

இந்த சந்திப்பை இந்திய பிரதமர் உறுதிப்படுத்தினார்.

இந்திய பிரதமரின் தேர்தல் வெற்றிக்கு Justin Trudeau வாழ்த்து தெரிவித்ததாக கனடிய பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

இருதரப்பு உறவுகள் குறித்து இரு நாட்டின் தலைவர்கள் உரையாற்றினர் என கனடிய பிரதமர் அலுவலக பேச்சாளர் Ann-Clara Vaillancourt கூறினார்.

G7 நாடுகளின் தலைவர் மாநாட்டில் இந்தியா பார்வையாளராக பங்கேற்கிறது.

அங்கு இந்தியப் பிரதமர் G7 நாடுகளின் தலைவர்களுடன் திட்டமிடப்பட்ட சந்திப்புகளை நடத்தினார்.

ஆனாலும் கனடிய பிரதமருக்கும் நரேந்திர மோடிக்கும் இடையில் சந்திப்பு எதுவும் திட்டமிடப்படவில்லை.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற G20 உச்சி மாநாட்டுக்குப் பின்னர் இந்த இரு தலைவர்களும் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த மாநாட்டின் பின்னர், கனடியரான Hardeep Singh Nijjar படுகொலையில் இந்திய அரசின் தொடர்பு இருப்பதாக நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டினார்.

சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar, கடந்த வருடம் June மாதம் British Colombia மாகாணத்தின் Surrey நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக மூன்று இந்தியர்கள் மீது கடந்த மாதம் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

Related posts

கனடியத் தமிழர் கூட்டு – சிவஞானம் சிறீதரன் பிரத்தியேக சந்திப்பு!

Lankathas Pathmanathan

தடுப்பூசிக்கு இடையிலான 16 வார கால இடைவெளியை குறைக்கும் நிலையில் கனடா: வைத்தியர் Edward Njoo

Gaya Raja

கனடாவின் புதிய ஆளுநர் நாயகம் 26ஆம் திகதி பதவி ஏற்கிறார்!

Gaya Raja

Leave a Comment