தேசியம்
செய்திகள்

Ontario, Quebec மாகாணங்களில் பல்லாயிரக் கணக்கானோர் மின்சாரத்தை இழந்தனர்

Ontario, Quebec மாகாணங்களில் பல்லாயிரக் கணக்கானோர் மின்சாரத்தை இழந்துள்ளனர்.

வியாழக்கிழமை (13) ஏற்பட்ட கடுமையான இடியுடன் கூடிய மழை காரணமாக Ontario, Quebec மாகாணங்களில் பல்லாயிரக்கணக்கானோர் மின்சாரத்தை இழந்தனர்.

இரண்டு மாகாணங்களிலும் மொத்தமாக 60,000 அல்லது அதற்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Ontario மாகாணத்தின் Timmins நகரில் இருந்து, Quebec மாகாணத்தின் St. Lawrence River பகுதிவரை பாதிக்கப்பட்ட பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (14) காலை 8 மணி வரை, Ontario மாகாணத்தில் 54,000 வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் இல்லாத நிலை தொடர்கிறது.

வெள்ளி இரவுக்குள் இவர்களில் அநேகருக்கு மீண்டும் மின்சார இணைப்பு வழங்கப்படும் என Hydro One கணித்துள்ளது.

வெள்ளி காலை 8 மணி வரை, Quebec மாகாணத்தில் 7,000 வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் இல்லாத நிலை தொடர்கிறது.

Related posts

Toronto பெரும்பாக இந்து ஆலயங்கள் மீது தாக்குதல்

Lankathas Pathmanathan

மீண்டும் நான்காயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள்!

Gaya Raja

பணியிடத்தில் மது அருந்திய குற்றச்சாட்டு: பதவி விலகிய அமைச்சர்!

Gaya Raja

Leave a Comment