December 12, 2024
தேசியம்
செய்திகள்

தமிழீழ பெண்கள் கால்பந்தாட்ட அணியின் எண்மருக்கு கனடாவில் வரவேற்பு

தமிழீழ பெண்கள் கால்பந்தாட்ட அணியில் கனடாவில் இருந்து சென்று பங்கேற்ற எண்மர் நாடு திரும்பினர்.

அங்கிகரிக்கப்படாத நாடுகளுக்கான உலக பெண்கள் கால்பந்தாட்ட போட்டியில் கனடாவில் இருந்து சென்று பங்கேற்ற தமிழீழ அணியின் எண்மர் நாடு திரும்பினர்.

2024ஆம் ஆண்டுக்கான கொனீபா – CONIFA – மகளிர் கால்பந்தாட்ட உலகக் கிண்ண போட்டி  நோர்வே நாட்டில் நடைபெற்றது.

இந்த தொடரில் தமிழீழ அணியின் சார்பில் கனடிய தமிழ் வீராங்கனைகளும் பங்கேற்றனர்.

கனடியத் தமிழர்களான ஐந்து வீராங்கனைகள், அணி மேலாளர், அணி உதவி மேலாளர், அணி மருத்துவர் ஆகியோர் திங்கட்கிழமை (10) கனடா திரும்பினர்.

கால்பந்தாட்ட வீராங்கனைகளான ப்ரீத்தி சுரேஷ்குமார், பிரிந்திகா ஐங்கரமூர்த்தி, மாயா சத்யன், ஓவியா சத்யன், மெலனி சுரேஷ்குமார் ஆகியோருடன் அணி மேலாளர் சங்கரி ஸ்ரீதயாகுமார், அணி உதவி மேலாளர் அகனி சிதம்பரநாதன், அணி மருத்துவர் அபி சண்முகரத்தினம் ஆகியோர் கனடா திரும்பினர்.

இவர்களுக்கு Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் கூடியிருந்த குடும்பத்தினர் நண்பர்களால் வரவேற்பு வழங்கப்பட்டது.

தமிழீழ பெண்கள் கால்பந்தாட்ட அணியில் கனடாவில் இருந்து சென்று பங்கேற்றவர்களுக்கு ஒழுங்குகளை கனடிய தமிழர் விளையாட்டுத்துறை மேற்கொண்டிருந்தது

Related posts

மீண்டும் அதிகரிக்கும் வட்டி  விகிதம்?

Lankathas Pathmanathan

Stanley Cup: இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெறுமா Edmonton Oilers?

Lankathas Pathmanathan

British Colombia தடுப்பூசிகளுக்கு இடையிலான நாட்களை குறைக்கிறது !

Gaya Raja

Leave a Comment