தேசியம்
செய்திகள்

தீ விபத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மேற்கு Toronto தேவாலயம் முற்றிலுமாக அழிவு

வரலாற்றுச் சிறப்புமிக்க மேற்கு Toronto தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை (09) காலை ஏற்பட்ட தீயினால் St. Anne’s Anglican தேவாலயம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.

தீயினால் தேவாலய கட்டிடம் முழுவதும் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தின் போது தேவாலயத்தினுள் எவரும் இருக்கவில்லை.

இதனால் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்திற்கு காரணம் குறித்து ஊகிக்க முடியாது என Toronto துணை தீயணைப்புத் தலைவர் Jim Jessop  கூறினார்

இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தனது சபைக்கும், சமூகத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது என பாதிரியார் Don Beyers ஞாயிறு பிற்பகல் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த தேவாலயம் 1907 – 1908 காலப்பகுதியில் கட்டப்பட்டது.

1996 இல் Toronto நகரம் இந்த தேவாலயத்தை ஒரு பாரம்பரிய தளமாக அறிவித்தது.

அந்த ஆண்டு கனடாவின் தேசிய வரலாற்று தளமாகவும் இந்த தேவாலயம் அறிவிக்கப்பட்டது.

Related posts

காணாமல் போயுள்ள சிறுமியை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவி கோரல்

Lankathas Pathmanathan

2024 Paris Olympics: கனடாவின் இருபதாவது பதக்கம்

Lankathas Pathmanathan

Ontarioவில் monkeypox பரவல் கடந்த July மாதம் உச்சத்தை எட்டியது

Lankathas Pathmanathan

Leave a Comment