தேசியம்
செய்திகள்

Mississauga நகர முதல்வர் இடைத் தேர்தல் வாக்களிப்பு

Mississauga நகர முதல்வர் இடைத் தேர்தலில் வாக்களிப்பு திங்கட்கிழமை (10) நடைபெறுகிறது.

Mississauga நகரின் அடுத்த முதல்வருக்கான பதவிக்கு 16 பேர் போட்டியிடுகின்றனர்.

இவர்களில் நான்கு நகரசபை உறுப்பினர்கள், முன்னாள் நகர முதல்வரின் முன்னாள் கணவர் ஆகியோரும் அடங்குகின்றனர்.

நகரசபை உறுப்பினர்களான Carolyn Parrish, Stephen Dasko, Alvin Tedjo, Dipika Damerla ஆகிய நகரசபை உறுப்பினர்கள் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

தவிரவும் முன்னாள் நகர முதல்வரின் முன்னாள் கணவர் Brian Crombie இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுகின்றார்.

முன்நிலை வேட்பாளர்கள்

முன்னணி வேட்பாளர்களின் ஒருவராக உள்ள Carolyn Parrish, 2006 இல் நகரசபை அரசியலில் ஈடுபட்டார்.

அதற்கு முன்னர் அவர் 13 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டவர்

மற்றொரு முன்னணி வேட்பாளர் Dipika Damerla, 2018 முதல் 7ஆவது தொகுதியின் நகரசபை உறுப்பினராக உள்ளார்.

அவர் முன்னர் Ontario மாகாண சபை உறுப்பினராக பணியாற்றினார்.

இரண்டாவது தொகுதியின் நகரசபை உறுப்பினர் Alvin Tedjo, முன்னர் Toronto Metropolitan பல்கலைக்கழகம், Sheridan கல்லூரி, Ontario மாகாண அரசாங்கம் ஆகியவற்றில் பணியாற்றியவர்.

இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர் Mississauga நகரின் ஏழாவது நகர முதல்வராக பதவி ஏற்பார்.

Mississauga நகரின் ஆறாவது நகர முதல்வராக Bonnie Crombie 2014 முதல் 2024 வரை 10 ஆண்டுகள் சேவையாற்றினார்.

Ontario மாகாண Liberal கட்சி தலைவர் பதவியை வெற்றியடைந்த நிலையில் Mississauga நகர முதல்வர் பதவியில் இருந்து Bonnie Crombie விலகியிருந்தார்.

Related posts

NDP தேசிய மாநாட்டில் Jagmeet Singh தலைமைத்துவம் குறித்த வாக்கெடுப்பு!

Lankathas Pathmanathan

Ontarioவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் வியாழன் முதல் நான்காவது தடுப்பூசியை பெறலாம்

Lankathas Pathmanathan

Donald Trump மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியானால் கனடாவுக்கு பாதிப்பு?

Lankathas Pathmanathan

Leave a Comment