Ontario மாகாண வீட்டு வசதித்துறை இணை அமைச்சராக விஜய் தணிகாசலம் நியமிக்கப்பட்டார்.
Ontario முதல்வர் Doug Ford தனது அமைச்சரவையில் பெரும் மாற்றத்தை வியாழக்கிழமை (06) அறிவித்தார்.
இந்த அமைச்சரவை மாற்றத்தில் தமிழ் மாகாணசபை உறுப்பினர் விஜய் தணிகாசலத்திற்கு புதிய துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
Ontario மாகாண வீட்டு வசதித்துறை அமைச்சராக – Municipal Affairs and Housing Minister – Paul Calandra பதவி வகிக்கிறார்.
அவரின் தலைமையில் செயல்பட தயாராக உள்ளதாக Scarborough-Rouge Park மாகாண சபை உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்தார்.
முன்னைய அமைச்சரவையில் விஜய் தணிகாசலம், போக்குவரத்து இணை அமைச்சர் – Associate Minister of Transportation – பதவி வகித்தவர்.