தேசியம்
செய்திகள்

அறுவை சிகிச்சையின் பின்னர் இரண்டு  குழந்தைகள் மரணம்

McMaster குழந்தைகள் மருத்துவமனையில் இரண்டு  குழந்தைகள் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hamilton நகரில் உள்ள மருத்துவமனையில் Tonsil, adenoid அறுவை சிகிச்சையின் பின்னர் இந்த குழந்தைகள் இறந்ததாக அறிவிக்கப்படுகிறது.

இந்த மரணங்கள் குறித்த தகவலை புதன்கிழமை (05) மருத்துவமனை வெளியிட்டது

அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட இரண்டு குழந்தை மருத்துவமனையை விட்டு வெளியேறிய பின்னர் இறந்துவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஒரு குழந்தை May மாதத்திலும் மற்றொரு குழந்தை இந்த மாதத்திலும் இறந்தது.

அறுவை சிகிச்சைக்கு மறுதினம் ஒரு குழந்தை இறந்தது

அறுவை சிகிச்சைக்கு ஒன்பது நாட்களுக்கு பின்னர் இரண்டாவது குழந்தை இறந்தது.

இந்த மரணங்கள் குறித்த விரிவான மறு ஆய்வு முன்னெடுக்கப்படுகிறது.

இந்த நிலையில் 18 வயதிற்குட்பட்ட நோயாளிகளுக்கு திட்டமிடப்பட்ட இதுபோன்ற அறுவை சிகிச்சை நடைமுறைகளை மருத்துவமனை இடை நிறுத்தியுள்ளது.

Related posts

LCBO வேலை நிறுத்தம் தற்காலிகமாக தொடரும்?

Lankathas Pathmanathan

Brampton தமிழர் அதிஷ்டலாப சீட்டிழுப்பில் 1 மில்லியன் டொலர் வெற்றி

Lankathas Pathmanathan

B.C. புதிய முதல்வராக David Eby பதவியேற்பு

Lankathas Pathmanathan

Leave a Comment