Normandy Juno கடற்கரையில் கனடியர்கள் D-Day 80 வது ஆண்டு நிறைவைக் குறிக்கின்றனர்.
வியாழக்கிழமை காலை நடைபெற்ற இந்த நிகழ்வில் கனடிய பிரதமர் Justin Trudeau, பிரான்சு பிரதமர் Gabriel Attal, உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பல தசாப்தங்களுக்கு முன்னர் இதே கடற்கரையில் யுத்தத்தில் உயிர் பிழைத்த 13 கனடிய இராணுவ உறுப்பினர்களும் இராணுவ சீருடையில் கலந்து கொண்டனர்.
இவர்களில் 104 வயதான முன்னாள் கனடிய இராணுவ உறுப்பினர் அடங்குகிறார்.
ஆயிரக்கணக்கானவர்கள் இந்த நினைவு நிகழ்வில் பங்கேற்றனர்.