தேசியம்
செய்திகள்

Pride பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக $1.5 மில்லியன் நிதியுதவி

Pride பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 1.5 மில்லியன் டொலர்களை உதவியாக கனடிய அரசாங்கம் வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள Pride அமைப்புகளுக்கு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மத்திய அரசு இந்த உதவிகளை வழங்குகிறது.

LGBTQ2S+ வெறுப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது.

நிகழ்வு காப்பீட்டுக்கான செலவுகள், அவசர கால திட்டமிடல், கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை, ஊழியர்கள், தன்னார்வலர்களுக்கான பயிற்சி ஆகியவற்றிற்கான அதிகரித்து வரும் செலவுகளை ஈடுகட்ட இந்த நிதியை பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது.

திங்கட்கிழமை (03) நாடாளுமன்றத்தில் Pride கொடி ஏற்றப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பெண்கள், பாலின சமத்துவம், இளைஞர்களுக்கான அமைச்சர் Marci Ien இந்த நிதி உதவியை அறிவித்தார்.

Pride கொடி ஏற்றப்படுவது Liberal அரசாங்கத்தின் கீழ் கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஒரு வருடாந்த நிகழ்வாக  மாறியுள்ளது.

Related posts

COVID விரைவு சோதனைகளை கொள்வனவு செய்வதற்கு 2.5 பில்லியன் மதிப்புள்ள மசோதா

Lankathas Pathmanathan

புதிய எல்லை பாதுகாப்பு திட்டம்!

Lankathas Pathmanathan

தேர்தலுக்குத் தயார்

Lankathas Pathmanathan

Leave a Comment