December 12, 2024
தேசியம்
செய்திகள்

Toronto பெரும்பாக திரையரங்க துப்பாக்கி சுட்டு சம்பவங்களின் தமிழருக்கு எதிராக குற்றச்சாட்டு!

Toronto பெரும்பாக துப்பாக்கி சுட்டு சம்பவத்தில் தமிழர் ஒருவருக்கு எதிராக குற்றச் சாட்டுக்கள் பதிவானது.

Toronto பெரும்பாக திரையரங்க துப்பாக்கி சுட்டு சம்பவங்களின் இரண்டாவது சந்தேக நபராக இவர் கருதப்படுகிறார்.

Brampton நகரை சேர்ந்த 43 வயதான பிரசன்னா காலிங்கராஜன் என்பவர் மீது குற்றச் சாட்டுக்கள் பதிவானது.

York பிராந்திய காவல்துறை குற்றப் புலனாய்வு பணியகத்தின் புலனாய்வாளர்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர்.

Toronto பெரும்பாகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நிகழ்ந்த நான்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக இந்த இரண்டாவது சந்தேக நபர் மீது காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

January 24, 2024 அன்று Richmond Hill நகரில் உள்ள தமிழர்களின் York திரையரங்கில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

அதே நாளில், Highway 7 and Weston வீதி பகுதியில் உள்ள திரையரங்கில் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

அதே இரவு Toronto நகரம், Peel பிராந்தியத்தில் உள்ள திரையரங்குகளில் இரண்டு வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்தது.

இந்த நான்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கும் ஒரே சந்தேக நபர்களுக்கு தொடர்பு இருப்பதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

April 30, 2024 அன்று Markham நகரை சேர்ந்த 27 வயதான Andrew Douglas என்ற சந்தேக நபர் மீது குற்றச் சாட்டுக்கள் பதிவானது.

இந்த நிலையில் May 22, 2024 அன்று தமிழரான பிரசன்னா காலிங்கராஜனுக்கு எதிரான குற்றச் சாட்டுக்கள் பதிவானது.

இவர்களுக்கு எதிரான குற்றச் சாட்டுக்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

இதில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மேலும் சந்தேக நபர்களை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதேவேளை Richmond Hill நகரில், East Beaver Creek and Highway 7 சந்திப்புக்கு அருகில் உள்ள York திரையரங்கில் May 17, 19, 24 ஆம் திகதிகளில் மூன்று துப்பாக்கி சூடு சம்பவங்கள் நிகழ்ந்தன.

விசாரணைகள் தொடரும் நிலையில் இதில் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்த விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

அதேவேளை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்த விபரங்களையும் இதுவரை காவல்துறையினர் வெளியிடவில்லை.

May 12, 2024 அன்று Scarboroughவில் தமிழர்களின் திரையரங்கில் தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

B.C. நெடுஞ்சாலை விபத்தில் 3 பேர் மரணம்

Lankathas Pathmanathan

அரசியலில் இருந்து விலகும் Ontarioவின் துணை முதல்வர்

Lankathas Pathmanathan

அவசர கால நிலையை அறிவித்த Winnipeg காவல்துறை

Lankathas Pathmanathan

Leave a Comment