December 12, 2024
தேசியம்
செய்திகள்

புதிய குடிவரவாளர்களுக்கு எதிரான Ontario முதல்வரின் கருத்து முட்டாள்தனமானது: குடிவரவு அமைச்சர்

புதிய குடிவரவாளர்களுக்கு எதிரான Ontario முதல்வரின் கருத்து முட்டாள்தனமானது என குடிவரவு அமைச்சர் Marc Miller கூறினார்.

Torontoவில் நிகழ்ந்த யூதப் பாடசாலை துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் புதிய குடிவரவாளர்கள் உள்ளனர் என Ontario முதல்வர் Doug Ford அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார்.

யூத நிறுவனங்கள் மீதான சமீபத்திய தாக்குதல்களின் பின்னணியில் புலம்பெயர்ந்தவர்கள் இருப்பதாகத் தோன்றுவதாக Doug Forg தெரிவித்த கருத்துக்கள் முட்டாள்தனமானது என  அமைச்சர் Marc Miller விமர்சித்தார்

இந்த வாரம் Toronto, Montreal நகரங்களில் உள்ள யூதப் பாடசாலைகள் மீதான துப்பாக்கி பிரயோகங்களை அமைச்சர் கண்டித்தார்.

Ontario முதல்வரின் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து, அவர் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்

Torontoவில் Bais Chaya Mushka ஆரம்ப பாடசாலையில் பள்ளியில் கடந்த சனிக்கிழமை (25) அதிகாலை 5 மணியளவில் இரண்டு சந்தேக நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாக Toronto காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதில் பாடசாலை கட்டிடத்திற்கு சேதம் ஏற்பட்டிருந்தாலும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் காவல்துறையினர் கூறினர்.

இந்த விசாரணையில் வெறுப்புக் குற்றப்பிரிவு ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆனாலும் வெறுப்பு அல்லது மதவெறியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா என கூற முடியாது என காவல்துறையினர் கூறினர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரையும் காவல்துறையினர் இதுவரை அடையாளம் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வதிவிட பாடசாலைகளில் உயிர் பிழைத்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஒரு தேசிய நினைவுச் சின்னம்

Lankathas Pathmanathan

British Colombia வங்கி கொள்ளை முயற்சியில் ஆறு காவல்துறையினர் காயம்

Ontario பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சந்தேக நபர் மொராக்கோவில் கைது?

Lankathas Pathmanathan

Leave a Comment