தேசியம்
செய்திகள்

வெளிநாட்டு குறுக்கீடு சட்டத்தை விரைவாக நிறைவேற்ற உதவ முன்வரும் எதிர்கட்சி

கனடாவில் வெளிநாட்டு தலையீட்டை எதிர்க்கும் சட்டத்தை நிறைவேற்ற Liberal அரசாங்கத்திற்கு உதவ Conservative கட்சி முன் வந்துள்ளது.

வெளிநாட்டு குறுக்கீடு சட்டத்தை விரைவாக நிறைவேற்ற உதவ தயாராகவுள்ளதாக பிரதான எதிர்கட்சியான Conservative கட்சி தெரிவித்தது.

Conservative நாடாளுமன்ற உறுப்பினரும், வெளியுறவு விமர்சகருமான Michael Chong, பொது பாதுகாப்பு அமைச்சர் Dominic LeBlancக்கு அனுப்பிய கடிதத்தில் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டது.

அமைச்சர் Dominic LeBlanc, Bill C-70 எனப்படும் வெளிநாட்டு தலையீட்டை எதிர்க்கும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

இந்த மாத ஆரம்பத்தில், கனடிய அரசியலில் வெளிநாட்டு தலையீட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு இந்த சட்டமூலத்தை அறிமுகப்படுத்தியது.

இந்த சட்டத்தின் விரைவான முன்னேற்றத்தை உறுதி செய்ய நல்லெண்ண நம்பிக்கையுடன் பணியாற்ற தயாராக உள்ளதாக Michael Chong அந்த கடிதத்தில் குறிப்பிட்டார்.

சர்வாதிகார அரசுகளின் அச்சுறுத்தல்களில் இருந்து எமது ஜனநாயக அமைப்புகள், தேர்தல்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய அரசாங்கமும் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் Michael Chong கூறினார்.

பொதுத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், எங்கள் தேர்தல்களில் கனடியர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கான நேரம் இதுவென அவர் தெரிவித்தார்

குறிப்பாக, Bill C-70 சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பின் பின்னர் ஒருமனதாக ஒப்புதல் பிரேரணையை முன்வைக்க Conservative கட்சி முன்வந்துள்ளது.

Related posts

பழங்குடி பாடசாலையில் மீட்கப்பட்ட 215 குழந்தைகளின் எச்சங்கள்!

Gaya Raja

100 மில்லியன் தடுப்பூசிகளை கனடா வளரும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும்

Gaya Raja

உடல் செயல்பாடின்மை காரணமாக அதிகரிக்கும் சுகாதார பராமரிப்பு செலவுகள்

Lankathas Pathmanathan

Leave a Comment