Mississauga நகர முதல்வராக Carolyn Parrish தெரிவாகும் சாத்தியக்கூறு அதிகரித்துள்ளது.
புதிதாக வெளியாகிய கருத்து கணிப்பொன்று இந்த இடைத் தேர்தலில் Carolyn Parrish வெற்றி பெறும் சாத்தியக்கூற்றை வெளிப்படுத்துகிறது.
புதிய கருத்து கணிப்பு முடிவுகளின் படி, முடிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 29 சதவீதம் பேர் Carolyn Parrishக்கு வாக்களிப்பார்கள்.
24 சதவீதம் பேர் Dipika Damerlaவுக்கு வாக்களிப்போம் என கூறியுள்ளனர்.
Alvin Tedjoவுக்கு வாக்களிப்பதாக 19 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
Stephen Daskoவுக்கு 12 சதவீதம், Brian Crombieக்கு 9 சதவீதம் ஆதரவு உள்ளது.
தீர்மானித்த வாக்காளர்களில் 7 சதவீதம் பேர் போட்டியிடும் 16 வேட்பாளர்களில் மற்றொருவருக்கு வாக்களிக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
சமீபத்திய கருத்து கணிப்பு முடிவுகள் மூன்று வாரங்களுக்கு முன்னர் வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகளில் இருந்து Carolyn Parrishக்கு 8 சதவீத சரிவையும், Dipika Damerlaவுக்கு 4 சதவீத அதிகரிப்பையும் காட்டுகின்றன,
ஆரம்ப வாக்களிப்பு முடிவுகள் இதுவரை பொதுமக்களிடமிருந்து தேர்தலில் அதிகரித்த ஆர்வத்தைக் காட்டுகிறது.
2022 நகரசபை தேர்தல்களுடன் ஒப்பிடும்போது, முதல் மூன்று நாட்களில் முன்கூட்டிய வாக்களிப்பில் வாக்காளர்களின் எண்ணிக்கை 42 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தத் தேர்தலில் இதுவரை 2,250 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
முன்கூட்டிய வாக்களிப்பு June 1-2 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த தேர்தலுக்கான வாக்களிப்பு திகதி June 10 ஆம் திகதியாகும்.
இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர் Mississauga நகரின் ஏழாவது நகர முதல்வராக பதவி ஏற்பார்.