நாடாளுமன்ற சபாநாயகரை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர்
கட்சி சார்பான குற்றச்சாட்டுகளின் பேரில் சபாநாயகர் Greg Fergusசை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை மீதான வாக்களிப்பு நடைபெறவுள்ளது
Conservative தலைமையிலான இந்த பிரேரணையின் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை (28) இரவு வாக்களிக்கவுள்ளனர்.
சபாநாயகர் பதவியில் இருந்து உடனடியாக விலகி எதிர்வரும் திங்கட்கிழமை புதிய சபாநாயகர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என இந்த பிரேரணை கோருகிறது
ஏழு மாதங்களுக்கு முன்னர் சபாநாயகராக பதவி ஏற்ற Greg Fergus, பாரபட்சமான நடத்தை குறித்த சர்ச்சைகள், குற்றச்சாட்டுகளுக்கு புதியவர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.