தேசியம்
செய்திகள்

தேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்?

Ontario மாகாணத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகளுக்கு  அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

Ontario முதல்வர் Doug Ford விரைவில் தேர்தல் நடைபெற கூடிய ஊகங்களை தூண்டியுள்ளார்.

மாகாண தேர்தல் Ontarioவில் 2026 ஆம் ஆண்டு June மாதம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளன.

ஆனாலும் இந்த திகதியில் தேர்தலை நடத்த உறுதியளிக்க முன்வைக்கப்பட்ட கேள்விகளை Doug Ford தவிர்த்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தேர்தல் திகதி குறித்த கேள்வி முதல்வரிடம் முன்வைக்கப்பட்டது.

ஆனாலும் அந்த கேள்விகளுக்கு அவர் நேரடியாக பதிலளிக்கவில்லை.

இந்தப் பின்னணியில் Doug Ford அரசாங்கத்தின் சமிக்ஞைகளை தனது கட்சி தீவிரமாக எடுத்துக் கொள்வதாக Ontario NDP தலைவர் Marit Stiles கூறினார்.

தேர்தலுக்குத் தயாராகுமாறு தனது கட்சிக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை முன்கூட்டிய தேர்தலுக்கான சாத்தியக்கூறுகளை அறிகுறிகள் சுட்டிக்காட்டுகின்றன என Ontario Liberal கட்சி தலைவர் Bonnie Crombie தெரிவித்தார்.

ஆனாலும் தமது ஆட்சி காலத்தை குறைத்ததற்காக வாக்காளர்களால் Doug  Ford அரசாங்கம் தண்டிக்கப்படலாம் என Bonnie Crombie எச்சரித்தார்.

Related posts

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்த தகவல்களை மத்திய அரசாங்கத்துடன் CSIS பகிர்ந்து கொள்ள வேண்டும்

Lankathas Pathmanathan

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தயார்: பிரதமர்

Lankathas Pathmanathan

Ontarioவில் மீண்டும் ஒரு Omicron திரிபு

Lankathas Pathmanathan

Leave a Comment