வேலை நிறுத்தங்களின் போது மாற்றுத் தொழிலாளர்களை பயன்படுத்துவதை தடை செய்யும் சட்டமூலம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
திங்கட்கிழமை (27) நடைபெற்ற நாடாளுமன்ற வாக்கெடுப்பில் இந்த சட்டமூலம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இந்த நிலையில் குறிப்பிட்ட சட்டமூலம் 316-0 என்ற கணக்கில் நிறைவேற்றப்பட்டது.
தொழிலாளர் அமைச்சர் Seamus O’Regan கடந்த November மாதம் இந்த சட்டமூலத்தை தாக்கல் செய்தார்.
புதிய ஜனநாயக கட்சி உடனான சிறுபான்மை Liberal அரசாங்கத்தின் ஒப்பந்தத்தின் கீழ் ஒரு உறுதிப்பாட்டை பூர்த்தி செய்யும் வகையில் இந்த சட்டமூலம் அமைகிறது.