December 12, 2024
தேசியம்
செய்திகள்

Toronto பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறும் எண்ணம் இல்லை: பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் உறுதி

Toronto பல்கலைக்கழகத்தில் முகாமிட்டுள்ள பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேறும் திட்டத்தில் இல்லை என தெரிவித்தனர்.

பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனிய சார்பு எதிர்ப்பாளர்கள் பல வாரங்களாக முகாமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் பாடசாலை நிர்வாகம் வழங்கிய அத்துமீறல் அறிவிப்பு விதிமுறைகளை மதிக்கும் எண்ணம் இல்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை (27) காலை 8 மணிக்குள் ஆர்ப்பாட்டத் தளத்தை அகற்றும் திட்டம் இல்லை எனவும் அவர்கள்  கூறுகின்றனர்.

மாறாக, Ontario தொழிலாளர் சம்மேளனத்துடன் இணைந்து பேரணி ஒன்றை நடத்தப்போவதாக போராட்ட ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்

தமது கோரிக்கைகளை நிறைவேற்ற பாடசாலையை கட்டாயப்படுத்தும் முயற்சியில் இந்த பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

திங்கள் காலை 8 மணிக்குள் முகாமை அகற்றுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பல்கலைக்கழக அதிகாரிகள் அத்துமீறல் அறிவிப்பை வெள்ளிக்கிழமை (24) வழங்கினர்.

எதிர்ப்பாளர்கள் அதற்கு இணங்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் தடை உத்தரவை பெறத் தயாராகவுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை (26) அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இந்த நிலையில் ஞாயிறு மாலை இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுத்தனர்.

இந்த பேச்சுவார்த்தை குறித்து போராட்டக்காரர்களோ அல்லது பல்கலைக்கழகமோ பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை.

Related posts

B.C. வாகன ஓட்டுனர்களுக்கு ஒரு முறை எரிபொருள் தள்ளுபடி

Lankathas Pathmanathan

Quebec வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தீயணைப்பு படையினரை தேடும் பணி தொடர்கிறது

Lankathas Pathmanathan

வதிவிட பாடசாலைகளின் இறப்புகள் குறித்த விசாரணைக்கு பிரதமர் நிதி உதவி

Lankathas Pathmanathan

Leave a Comment