December 12, 2024
தேசியம்
செய்திகள்

Mississauga  நகர முதல்வர் இடைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

Mississauga  நகர முதல்வர் இடைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

இந்த இடைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த வெள்ளி,சனி கிழமைகளில் நடைபெற்றது.

Mississauga நகர சபையில் இந்த முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

தொடர்ந்து முன்கூட்டிய வாக்களிப்பு எதிர்வரும் சனி, ஞாயிறு கிழமைகளில் நடைபெறவுள்ளது.

June 1, 2 ஆம் திகதிகளில் நடைபெறும் முன்கூட்டிய வாக்களிக்கும் இடங்கள் நகரம் முழுவதும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்படும்.

Mississauga நகரின் அடுத்த முதல்வருக்கான பதவிக்கு 20 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலுக்கான வாக்களிப்பு திகதி June 10 ஆம் திகதியாகும்.

இந்த தேர்தலில் நான்கு நகரசபை உறுப்பினர்கள் உட்பட, முன்னாள் நகர முதல்வரின் முன்னாள் கணவர் உட்பட 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

நகரசபை உறுப்பினர்களான Carolyn Parrish, Stephen Dasko, Alvin Tedjo, Dipika Damerla ஆகிய  நகரசபை உறுப்பினர்கள் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

தவிரவும் முன்னாள் நகர முதல்வரின் முன்னாள் கணவர் Brian Crombie இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுகின்றார்.

இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர் Mississauga நகரின் ஏழாவது நகர முதல்வராக பதவி ஏற்பார்.

Mississauga நகரின் ஆறாவது நகர முதல்வராக Bonnie Crombie 2014 முதல் 2024 வரை 10 ஆண்டுகள் சேவையாற்றினார்.

Ontario மாகாண Liberal கட்சி தலைவர் பதவியை வெற்றியடைந்த நிலையில் Mississauga நகர முதல்வர் பதவியில் இருந்து Bonnie Crombie விலகியிருந்தார்.

புதிய நகர முதல்வர் தெரிவாகும் வரை, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, தொகுதி வாரியாக நகரசபை உறுப்பினர்கள் Mississauga நகர முதல்வர் பதவியில் செயலாற்றி வருகின்றனர்.

Related posts

200க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் காவல்துறையினரால் பறிமுதல்

Lankathas Pathmanathan

11இலட்சத்தை தாண்டியது COVID தொற்றுக்களின் எண்ணிக்கை

Gaya Raja

Star Blanket Cree Nation பகுதிக்கு பிரதமர் செல்லாதது குறித்து ஏமாற்றம்

Lankathas Pathmanathan

Leave a Comment