இலங்கையருக்கு ஆதரவாக நிதி சேகரிக்க Marathon ஓட்டத்தில் Ottawa நகர முதல்வர் பங்கேற்றார்.
கடந்த March மாதம் ஆறு இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உயிர் பிழைத்த தனுஷ்க விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக Ottawa நெடுந்தூர ஓட்டத்தில் நகர முதல்வர் பங்கேற்றார்.
ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற Marathon நிகழ்வில் இம்முறை Ottawa நகர முதல்வர் Mark Sutcliffe பங்கேற்றார்.
Ottawa நகர முதல்வர் இந்த நெடுந்தூர ஓட்டத்தை 3:55:56 நேரத்தில் நிறைவு செய்தார்.
இதில் சேகரிக்கப்படும் பணத்தை, தனுஷ்க விக்கிரமசிங்கவுக்கு நகர முதல்வர் வழங்குகின்றார்.
“தனுஷ்க விக்கிரமசிங்க நினைத்துப் பார்க்க முடியாத ஒரு சோகத்தை சந்தித்துள்ளார்” என Ottawa நகர முதல்வர் Mark Sutcliffe விபரித்துள்ளார்.
அவரது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவ நிதி சேகரிக்க முடிவு செய்ததாக Mark Sutcliffe கூறினார்
நகர முதல்வருக்கு மட்டுமல்ல, நகர வாசிகள் அனைவருக்கும் நன்றியுடைவராக உள்ளதாக தனுஷ்க விக்கிரமசிங்க தெரிவித்தார்.
March 6ஆம் திகதி Ottawaவின் புறநகர்ப் பகுதியான Barrhavenனில் உள்ள இல்லமொன்றில் ஒரு தாய், அவரது நான்கு குழந்தைகள், குடும்ப நண்பரொருவர் என ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் தனுஷ்க விக்கிரமசிங்க கடுமையான காயங்களுடன் உயிர் பிழைத்தார்.
Tartan Ottawa சர்வதேச Marathon இந்த வருடம் ஐம்பதாவது ஆண்டாக நடைபெற்றது.
இம்முறை 33,000 பேர் இந்த Marathon ஓட்டத்தில் பங்கேற்றனர்.