British Colombia மாகாணத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் இரண்டு பேர் இறந்தனர்.
Squamish நகராட்சிக்கு அருகில் வெள்ளிக்கிழமை (24) விமானம் விழுந்ததில் இரண்டு பேர் இறந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வெள்ளி மாலை தானியங்கி விபத்து அறிவிப்பு மூலம் விபத்து குறித்து எச்சரிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை (26) , விபத்து நடந்த இடத்திற்கு சென்றதாக RCMP தெரிவித்தது.
இந்த விபத்துக்கான காரணத்தை அறிவதற்காக கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம், B.C. மரண விசாரணையாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாக RCMP மேலும் கூறியுள்ளது.