தேசியம்
செய்திகள்

தமிழர்களின் திரையரங்கில் ஒரு வாரத்தில் மூன்று முறை துப்பாக்கி சுடு

Richmond Hill நகரில் உள்ள தமிழர்களின் திரையரங்கில் ஒரு வாரத்தில் மூன்று முறை துப்பாக்கி சுட்டு சம்பவம் நிகழ்ந்தது.

East Beaver Creek and Highway 7 சந்திப்புக்கு அருகில் உள்ள York திரையரங்கில் இந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்த சம்பவங்கள் குறித்த விசாரணைகளை York பிராந்திய காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடந்ததாக கூறப்படும் சம்பவங்களுக்காக திரையரங்கிற்கு May 17 முதல் மூன்று முறை அழைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

May 17, 19, 24 ஆம் திகதிகளில் இந்த துப்பாக்கி சுட்டு சம்பவங்கள் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மூன்று வெவ்வேறு வாகனங்களில் சென்ற சந்தேக நபர்கள் York திரையரங்கின் முன் கதவு, யன்னல்களை நோக்கி துப்பாக்கியால் சுடுவதை அவதானித்ததாக York பிராந்திய காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவங்களில் எவருக்கும் யாருங்கள் ஏற்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

விசாரணைகள் தொடரும் நிலையில் இதில் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்த விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

அதேவேளை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்த விபரங்களையும் இதுவரை காவல்துறையினர் வெளியிடவில்லை.

சம்பவம் குறித்து சாட்சிகள் அல்லது தகவல் தெரிந்தவர்கள் தங்களை தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த January மாதம் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்காக காவல்துறையினர் இதே திரையரங்கிற்கு அழைக்கப்பட்டனர்.

கடந்த வாரம் Scarboroughவில் தமிழர்களின் திரையரங்கில் தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்தது

McCowan & Finch சந்திப்பில் உள்ள Woodside திரையரங்கில் தீ வைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது குறித்து Toronto காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்கின்றன.

Related posts

நெருக்கடிக்கு மத்தியில் Alberta – உதவ முன்வந்த Ontario!

Gaya Raja

September 30ஆம் திகதியை குறிக்கும் நான்கு புதிய தபால் தலைகளை வெளியிடும் கனடா Post

Lankathas Pathmanathan

Assembly of First Nations புதிய தலைவர் தெரிவு

Lankathas Pathmanathan

Leave a Comment