Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவில் இணைய அனுமதிக்குமாறு Toronto நாடாளுமன்ற உறுப்பினர் கோரியுள்ளார்.
Conservative கட்சியின் தலைவரிடம் Toronto நாடாளுமன்ற உறுப்பினர் Kevin Vuong, இந்த அனுமதியை கோரியுள்ளார்.
இந்த கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்றை அவர் Pierre Poilievreருக்கு அனுப்பியுள்ளார்.
Kevin Vuong அண்மைக் காலத்தில் Conservative கட்சிகளுடன் இணைந்து பல்வேறு சட்ட மூலங்களில் வாக்களித்துள்ளார்.
கடந்த Novemberரில் கட்சி உறுப்பினர் அங்கத்துவம் ஒன்றை பெற்றதாக அவர் கூறினார்.
Liberal கட்சியின் சார்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட Kevin Vuong, சுயேட்சை உறுப்பினராக செயல்படுகின்றார்.
இந்த நிலையில் அவர் Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவில் இணைய அனுமதி கோரியுள்ளார்.
இதன் மூலம் Toronto பெரும்பாக Spadina-Fort York தொகுதியில் அடுத்த தேர்தலில் Conservative கட்சிக்கான வேட்புமனுவை கோர அவர் உத்தேசித்துள்ளார்.
2021 தேர்தலில் அவர் Liberal கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார்.
ஆனாலும் வாக்கெடுப்புக்கு சில நாட்களுக்கு முன்னர் கட்சி அவரை தமது வேட்பாளர் நிலையில் இருந்து Liberal கட்சி விலக்கியது.