Ontario மாகாண தேர்தல் விரைவில் நடைபெற கூடிய சாத்தியக்கூறுகள் தோன்றியுள்ளன.
Ontario முதல்வர் Doug Ford விரைவில் தேர்தல் நடைபெற கூடிய ஊகங்களைத் தூண்டுகிறார்.
Ontario மாகாண தேர்தல் 2026 ஆம் ஆண்டு June மாதம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளன.
ஆனாலும் இந்த திகதியில் தேர்தலை நடத்த உறுதியளிக்க முன்வைக்கப்பட்ட கேள்விகளை Doug Ford தவிர்த்துள்ளார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தேர்தல் திகதி குறித்த கேள்வி முதல்வரிடம் முன்வைக்கப்பட்டது.
ஆனாலும் அந்த கேள்விகளுக்கு அவர் நேரடியாக பதிலளிக்கவில்லை.