கனடாவில் தற்போது பெரும் காட்டுத்தீ எரிந்து வருகிறது.
இந்த காட்டுத்தீ காரணமாக British Colombia, Manitoba, Alberta மாகாணங்களில் ஆயிரக்கணக்கான கனடியர்கள் தமது இல்லங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
Alberta மாகாணத்தின் Fort McMurray பகுதியில் 6,600க்கும் அதிகமானவர்கள் தமது இல்லங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இவர்கள் குறைந்தது செவ்வாய்க்கிழமை வரை மீண்டும் வீடு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நகரின் ஏனைய பகுதிகள், அதைச் சுற்றியுள்ள பிற உட்பிரிவுகளில் வெளியேற்ற எச்சரிக்கை நடைமுறையில் உள்ளது.
தமது இல்லங்களில் இருந்து வெளியேறியவர்களுக்கு அனுதாபம் தெரிவித்த Alberta முதல்வர் Danielle Smith, பொதுமக்கள் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தினார்.
வடகிழக்கு British Columbiaவில், 4,700 பேர் வசிக்கும் Fort Nelsonனைச் சுற்றியுள்ள ஒரு விரிவுபடுத்தப்பட்ட பகுதி, வெளியேற்ற உத்தரவின் கீழ் உள்ளது.
Manitobaவில், சுமார் 500 பேர் வடமேற்கு சமூகமான Cranberry Portageசில் இருந்து வெளியேறினர்.