இஸ்ரேலிய தேசிய தினத்தைக் குறிக்கும் வகையில் Ottawa நகர சபையில் இஸ்ரேலிய தேசிய கொடி பறக்கிறது.
செவ்வாய்க்கிழமை (14) காலை 6 மணிக்கு முன்னதாக Ottawa நகர சபையில் இஸ்ரேலியக் கொடி ஏற்றப்பட்டது.
இஸ்ரேல் சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் தனிப்பட்ட நிகழ்வொன்று செவ்வாய் மாலை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் நகர மண்டபத்தில் குறிப்பிடத்தக்க காவல்துறையினரின் பிரசன்னம் உள்ளது.
Ottawa நகர சபையில் இஸ்ரேலிய தேசிய கொடி ஏற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று நடைபெறுகிறது.
சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டம் தொடரும் என Ottawa 4 Palestine அமைப்பு தெரிவித்துள்ளது.
2007ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் Ottawa நகர சபையில் இஸ்ரேலிய தேசிய கொடி May 14 ஆம் திகதி அன்று ஏற்றப்படுகிறது.
பாதுகாப்பு குறித்த காரணங்களுக்காக வழமையாக நடைபெறும் பொது நிகழ்வு இம்முறை இரத்து செய்யப்பட்டது.
இந்த முடிவு மத்திய, மாகாண அரசியல்வாதிகள், யூத சமூக குழுக்களிடம் இருந்து எதிர்ப்பை தோற்றுவித்தது.