தேசியம்
செய்திகள்

தமிழர்களின் திரையரங்கில் தீ வைக்கப்பட்ட சம்பவம்

தமிழர்களின் திரையரங்கில் தீ வைக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Scarboroughவில் உள்ள திரையரங்கில் ஞாயிற்றுக்கிழமை (12) அதிகாலை தீ வைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது குறித்து Toronto காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Mccowan & Finch சந்திப்பில் உள்ள Woodside திரையரங்கில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

ஞாயிறு அதிகாலை 4:00 மணிக்கு முன்னதாக தீ வைக்கப்பட்ட சம்பவம் குறித்த அழைப்பை அடுத்து காவல்துறையினர்  Woodside திரையரங்கு அமைந்துள்ள வணிக வளாகத்திற்கு சென்றனர்.

அதிகாரிகள் சம்பவ இடத்தை சென்றடைந்த போது, Toronto தீயணைப்பு படையினரால் தீ அணைக்கப்பட்டது.

தீயினால் திரையரங்கின் முன் கதவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்தில் எரிபொருள் கொள்கலன் இருந்ததாக காவல்துறையினர்  தெரிவித்தனர்.

விசாரணைகள் தொடரும் நிலையில் சந்தேக நபர்கள் குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

Related posts

Ontario நான்காவது தடுப்பூசிகளுக்கான தகுதியை விரிவுபடுத்துகிறது

Lankathas Pathmanathan

குழந்தைகளை தாக்கிய குற்றத்தை ஒப்புக்கொண்ட பராமரிப்பு ஊழியரான தமிழர்

Lankathas Pathmanathan

2.3 மில்லியன் தடுப்பூசி இந்த வாரம் கனடாவை வந்தடைகிறது!!!

Gaya Raja

Leave a Comment