தமிழ் இனப்படுகொலை கனடிய நாடாளுமன்றத்தில் நினைவு கூறப்பட்டபோது கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly கலந்து கொண்டார்.
தமிழின படுகொலையை நினைவு கூறும் “தமிழ் இனப்படுகொலை நினைவு தினம்” கனடிய நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்றது.
முடியரசு – பழங்குடியினர் உறவுகள் அமைச்சரும் Scarborough-Rouge Park நாடாளுமன்ற உறுப்பினருமான ஹரி ஆனந்தசங்கரி இந்த நினைவு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் Melanie Joly, எதிர்க்கட்சித் தலைவர் Pierre Poilievre உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூகத் தலைவர்கள், தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகளுடன் இணைந்துகொண்டு இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூறினார்கள்.
May 18, தமிழின படுகொலை தினமாக கனடிய நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டாவது வருடம் இதுவாகும்.