February 22, 2025
தேசியம்
செய்திகள்

கனடிய நாடாளுமன்றத்தில் தமிழ் இனப்படுகொலை நினைவு தினம்

தமிழின படுகொலையை நினைவு கூறும் “தமிழ் இனப்படுகொலை நினைவு தினம்” கனடிய நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெறுகிறது.

எதிர்வரும் May 18, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 15வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நாளாகும்.

May 18 தமிழின படுகொலை தினமாக கனடிய நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டாவது நினைவு தினமும் இதுவாகும்.

செவ்வாயன்று நடைபெறும்  நினைவு நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூகத் தலைவர்கள்,  தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகளுடன் இணைந்துகொண்டு இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூறுவார்கள்.

மாலை 4:30 மணிக்கு ஆரம்பமாகும் இந்த நிகழ்வு இரவு 6:30 மணி வரை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

முடியரசு – பழங்குடியினர் உறவுகள் அமைச்சரும் Scarborough-Rouge Park நாடாளுமன்ற உறுப்பினருமான ஹரி ஆனந்தசங்கரி இந்த நினைவு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளார்.

Related posts

Markham நகரின் ஏழாவது வட்டாரத்தில் முதல் தமிழர் வேட்புமனு தாக்கல்

Lankathas Pathmanathan

Ontario வாசிகள் முகக் கவசங்களை அணிய வேண்டும்: முதல்வர் Doug Ford

Lankathas Pathmanathan

வெளிவிவகார அமைச்சர் சீனா பயணம்

Lankathas Pathmanathan

Leave a Comment