தேசியம்
செய்திகள்

நெடுஞ்சாலை 401 விபத்தில் பலியான இருவர் இந்திய தமிழர்கள் – வெளியான அடையாளம்!

நெடுஞ்சாலை 401 இல் நிகழ்ந்த விபத்தில் பலியான இருவர் இந்திய தமிழர்கள் என உறுதிப்படுத்தப்படுகிறது.

இந்த வார ஆரம்பத்தில் நெடுஞ்சாலை 401 இல் தவறான பாதையில் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில்  பலியானவர்களில் 60 வயது ஆண், 55 வயது பெண் அடங்குகின்றனர்.

இவர்கள் இருவரும் Torontoவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நெடுஞ்சாலையில் தவறான வழியில் வாகனம் பயணித்ததில் நிகழ்ந்த விபத்தில் கைக்குழந்தை உட்பட நான்கு பேர் மரணமடைந்தனர்.

ஒரு கைக்குழந்தை, அந்த குழந்தையின் 60  வயதான தாத்தா 55 வயதான பாட்டி ஆகியோர் மரணமடைந்தவர்களில் அடங்குகின்றனர்

60  வயதான மணிவண்ணன், 55 வயதான மகாலட்சுமி என இவர்களில் இருவர் அடையாளம் காணப்பட்டனர்.

Torontoவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தேசியத்திடன் இதனை சனிக்கிழமை (04) காலை உறுதிப்படுத்தியது.

“இந்திய பிரஜைகளின் துயரமான இழப்புக்கு இதயப்பூர்வமான இரங்கல்கள்” என தூதரகம் தேசியத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல் பதிலில்  குறிப்பிட்டுள்ளது.

பலியான குழந்தையின் Ajax நகரை சேர்ந்த பெற்றோர், 33 வயதான தந்தை, 27 வயதான தாய் ஆகியோர் விபத்துக்குள்ளான வாகனத்தில் பயணித்தனர் என்பதை  Ontario வின் சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் – SIU – ஏற்கனவே உறுதிப்படுத்தியது.

இவர்கள் இருவரும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் தாய் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

மருத்துவமனையில் குடும்பத்துடன் சந்தித்த Toronto விற்கான இந்திய துணைத் தூதர் சித்தார்த்த நாத் அனைத்து  உதவிகளையும் செய்ய உறுதியளித்தார் என கூறப்படுகிறது.

இதில் பலியான மணிவண்ணன், மகாலட்சுமி தம்பதியினர் அண்மையில் இந்தியாவில் இருந்து விருந்தினர் பயண அனுமதியில் (visitor visa) கனடாவிற்கு வருகை தந்தவர்கள் என SIU தெரிவித்துள்ளது.

இவர்களின் வாகனத்துடன் மோதிய cargo வாகனத்தில் இரண்டு பேர் பயணித்தனர்.

அந்த வாகனத்தின் 21 வயது சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

38 வயதான ஆண் பயணி ஒருவர் கடுமையான  காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

திங்கட்கிழமை (29) இரவு Whitby நகரில் இந்த விபத்தை தொடர்ந்து விசாரணைக்கு SIU அழைக்கப்பட்டது.

Clarington நகரில் நிகழ்ந்த கொள்ளை சம்பவம் குறித்த விசாரணைக்கு Durham பிராந்திய காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.

சந்தேக நபர் வாகனம் ஒன்றில் தப்பிச் சென்றுள்ளார்.

காவல்துறையினரால் பின் தொடரப்பட்டபோது, சந்தேகத்திற்குரிய வாகனம் தவறான திசையில் சென்று 401 நெடுந்தெருவில் நுழைந்தது.

இதன் போது பல வாகனங்கள் நெடுஞ்சாலை 412 இன் கிழக்கே மோதியதில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டது என Durham காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

Vancouver கட்டுமானப் பணி விபத்தில் ஒருவர் மரணம்

Lankathas Pathmanathan

கனடாவில் சர்வதேச பயணிகளுக்கான கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் இந்த மாதம் 22ஆம் திகதி ஆரம்பம்

Lankathas Pathmanathan

September 30ஆம் திகதியை குறிக்கும் நான்கு புதிய தபால் தலைகளை வெளியிடும் கனடா Post

Lankathas Pathmanathan

Leave a Comment