பிரெஞ்சு மொழியைப் பாதுகாக்க 603 மில்லியன் டொலர் ஐந்தாண்டுத் திட்டத்தை Quebec மாகாணம் வெளியிட்டது.
பிரெஞ்சு மொழிக்கான Quebec அமைச்சரவை அமைச்சர் Jean-François Roberge ஞாயிற்றுக்கிழமை (28) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
அரசாங்கத்தின் இந்த திட்டத்தில் ஒன்பது முன்னுரிமைகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் பல நடவடிக்கைகள் குடியேற்றத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
பிரெஞ்சு மொழி பேசும் பொருளாதார குடியேறியவர்களின் சதவீதத்தை அதிகரிப்பது இதில் ஒரு பிரதான பகுதியாகும்.
Quebec மாகாண குடியிருப்பாளர்களின் 2016 முதல் 2021 வரை வீட்டில் பிரஞ்சு மொழியைப் பேசுவோர் சதவீதம் குறைந்துள்ளதாக 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு தெரிவிக்கிறது
இதே கால கட்டத்தில் முதல் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலம் 12 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக அதிகரித்துள்ளது.