February 22, 2025
தேசியம்
செய்திகள்

கனடாவில் வெளியான தமிழின படுகொலை குறித்த நூல்

“போரின் சாட்சியம்” நூல் வெளியீடு British Colombia மாகாணத்தின் Burnaby நகரில் சனிக்கிழமை நடைபெற்றது.

இலங்கைத்தீவின் இறுதிப் போரின் போது இலங்கை இராணுவத்தினர் எவ்வாறு இனப்படுகொலை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் இந்த நூல் அமைக்கிறது.

முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களின் நேரடிச் சாட்சியங்களில் ஒருவரான சுரேன் கார்த்திகேசு இந்த நூலை தொகுத்துள்ளார்.

தற்போது British Colombia மாகாணத்தின் Vancouver ரில் வசித்து வரும் இவர் ஈழ நாதம் பத்திரிகையில் செய்தியாளராக இறுதி வரை கடமையாற்றியவர்.

இலங்கை இராணுவத்தினரின் தாக்குதலில் கணவன், மூன்று பிள்ளைகளை இழந்த திருமதி. சாந்தி இந்த நூலை வெளியிட்டிருந்தார்.

இளைய தலைமுறையின் பிரதிநிதியாக அபி சுவேந்திரகுமார் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

“போரின் சாட்சியம்” நூலை வெளியிட்ட திருமதி. சாந்தி – முதல் பிரதியை பெற்றுக்கொண்ட அபி சுவேந்திரகுமார்

 

இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் இளையோர்களின் பங்களிப்பு பெருமளவில் இருந்தது.

“போரின் சாட்சியம்” நூலின் முதல் பிரதி கடந்த 21ஆம் திகதி கனடாவின் முடியரசு-பழங்குடிகள் உறவுகள் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியிடம் வழங்கப்பட்டது.

“போரின் சாட்சியம்” நூலின் முதல் பிரதி பெற்றுக்கொண்ட கனடாவின் முடியரசு-பழங்குடிகள் உறவுகள் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி

2010ஆம் ஆண்டு MV Sun Sea கப்பல் மூலம் கனடா வந்தடைந்த அகதிகளில் ஒருவரான சுரேன் கார்த்திகேசு 2009 ஆம் ஆண்டு May மாதம் 17ஆம் திகதி வரை முள்ளிவாய்க்காலில் வாழ்ந்தவர்.

முள்ளிவாய்க்கால் யுத்த மீறல் குற்றமாக சுட்டிக் காட்டப்படும் cluster குண்டுத்தாக்குதல் இடம்பெற்றதற்கான நேரடி சாட்சியம் இவராவார்.

தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் கனடாவின் வேறு மாகாணங்களில் இந்த நூல் வெளியீடு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

Related posts

நீண்ட வார இறுதியில் எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கும்

Lankathas Pathmanathan

காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு படை உறுப்பினர் மரணம்

Lankathas Pathmanathan

காய்ச்சல் பருவத்தின் உச்சத்தை கனடா எட்டியுள்ளது

Lankathas Pathmanathan

Leave a Comment