தேசியம்
செய்திகள்

மேல் சட்டசபை செலவுகள் 2023இல் $7.2 மில்லியன்!

மேல் சட்டசபை (senate) செலவுகள் கடந்த ஆண்டு 7.2 மில்லியன் டொலர்களாக உயர்ந்தது

கனடிய மேல் சட்டசபை உறுப்பினர்கள் 2023 இல் 7.2 மில்லியன் டொலர் செலவை அறிவித்துள்ளனர்.

இது முந்தைய ஆண்டை விட 30 சதவீதம் அதிகரிப்பாகும்

இதில் பயணத்திற்கு 4 மில்லியன் டொலர்கள், வாழ்க்கைச் செலவுகளுக்கு 2.1 மில்லியன் டொலர்கள், அலுவலகச் செலவுகளுக்கு 1 மில்லியன் டொலர்கள், விருந்தோம்பலுக்கு 100,000 டொலர்கள் அடங்குகின்றது.

101 மேல் சட்டசபை உறுப்பினர்கள் செலவுகளின் பகுப்பாய்வின் பின்னர் இந்த தகவல் வெளியானது.

இதில் மேல் சட்டசபை உறுப்பினர்கள் சம்பளம், முழுநேர ஊழியர்கள், நிர்வாகப் பணியாளர்கள்,குழு செலவுகள் போன்ற செலவுகள் இதில் உள்ளடக்கப்படவில்லை.

Related posts

இங்கிலாந்தில் தொழிற்கட்சியின் தேர்தல் வெற்றி கனடாவுக்கு சாதகமானது?

Lankathas Pathmanathan

பொருளாதார நோபல் பரிசு பெற்றவரில் கனடியரும் அடங்குகிறார்!

Gaya Raja

2024 Paris Olympic: மூன்றாவது தங்கம் வென்ற கனடியர்

Lankathas Pathmanathan

Leave a Comment