தேசியம்
செய்திகள்

ஆறு இலங்கையர்களை கொலை செய்த சந்தேக நபர் நீதிமன்றில்

Ottawaவில் ஒரு வீட்டில் ஆறு இலங்கையர்களை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர் வியாழக்கிழமை (18) நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இது அவரது நான்காவது நீதிமன்ற விசாரணையாகும்.

இந்த படுகொலைகளின் சந்தேக நபருக்கு ஜாமீன் கோரும் திட்டம் இல்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

சந்தேக நபர் Febrio De-Zoysa மீண்டும் April 25 ஆம் திகதி காணொளி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராவார் என தீர்மானிக்கப்பட்டது.

அன்று இந்த கொலை வழக்கில் பூர்வாங்க விசாரணைக்கான திகதிகள் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தேக நபர் தொடர்ந்து காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை அவரது வழக்கறிஞர் Ewan Lyttle உறுதிப்படுத்தினார்

19 வயதான Febrio De-Zoysa மீது 6 முதல்தர கொலை குற்றச்சாட்டுகள், ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.

March 6ஆம் திகதி தலைநகர் Ottawaவின் புறநகர்ப் பகுதியான Barrhavenனில் உள்ள இல்லமொன்றில் ஒரு தாய், அவரது நான்கு குழந்தைகள், குடும்ப நண்பரொருவர் என ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

35 வயதான தர்ஷனி பண்டாரநாயக்கா, 7 வயதான இனுக்கா விக்கிரமசிங்க, 4 வயதான அஷ்வினி விக்கிரமசிங்க, 2 வயதான றினாயனா விக்கிரமசிங்க, இரண்டரை மாத கெலி விக்கிரமசிங்க, 40 வயதான காமினி அமரகோன் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் தந்தை தனுஷ்க விக்கிரமசிங்க கடும் காயங்களுடன் உயிர் தப்பினார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை முடிவடைந்த நிலையில் தொடர்ந்து கனடாவில் தங்கியிருக்க முடிவு செய்துள்ளார்.

Ottawa நகர வரலாற்றின் மிகப்பெரிய கொலை என கூறப்படும் இந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களில்  சிறிய குழந்தை தவிர ஏனையவர்கள் கனடாவுக்குப் புதிதாக வந்த இலங்கையர்களாவார்கள்.

இந்த கொலைகளுக்கான காரணம் எதையும் காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை.

அதேவேளை குற்றவாளிக்கு எதிரான குற்றங்கள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

1,000 நாட்கள் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்களுக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஆதரவுக் குரல்!

Gaya Raja

கனேடிய நாடாளுமன்றத்தின் இனப்படுகொலை தொடர்பான பிரேரணையை நிராகரிக்கும் இலங்கை

Leave a Comment