தேசியம்
செய்திகள்

தலைமைப் பதவிக்கு போட்டியிடும் எண்ணம் இல்லை: அமைச்சர் Dominic LeBlanc

Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் எண்ணம் இல்லை என அமைச்சர் Dominic LeBlanc தெரிவித்தார்.

பிரதமர் Justin Trudeau தலைமையின் கீழ் அடுத்த தேர்தலில் வேட்பாளராக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக Dominic LeBlanc தெரிவித்துள்ளார்

Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் அவரது ஆர்வம் குறித்த கேள்விகளுக்கு மத்தியில் இந்த கருத்தை அவர் தெரிவித்தார்.

Liberal தலைமை பதவிக்கு போட்டியிட திட்டமிட்டுள்ளீர்களா என கேட்டதற்கு, அவர் “இல்லை” என பதிலளித்தார்.

Justin Trudeau தலைமை பதவியில் இருந்து விலக வேண்டுமா என்ற கேள்விக்கு Dominic LeBlanc  பதிலளிக்கவில்லை.

Justin Trudeau பதவி விலகினால் Liberal கட்சித் தலைவர், பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதற்கான திட்டங்கள் குறித்து ஒரு முன்னாள் Liberal அமைச்சருடன் Dominic LeBlanc அண்மையில் சந்தித்து உரையாடியதாக புதன்கிழமை (17) Globe and Mail பத்திரிகை ஒரு பத்தியை வெளியிட்டது.

பிரச்சாரத்திற்கான அடித்தளத்தை அமைப்பதற்காக ஒரு குழுவில் அங்கம் வகிக்க Dominic LeBlanc ஒப்புக் கொண்டதாகவும் அந்த பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கனடிய அரசியலில் வெளிநாட்டு குறுக்கீடு வலையமைப்புகள் ஆழமாக உட்பொதிந்துள்ளன: CSIS

Lankathas Pathmanathan

Albertaவில் குழந்தைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் இலங்கையர்

Lankathas Pathmanathan

அவசர சிகிச்சை பிரிவுகளுக்கு உதவ மாற்றங்களை அறிவித்த Nova Scotia

Lankathas Pathmanathan

Leave a Comment