தேசியம்
செய்திகள்

இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலுக்கு கனடிய பிரதமர் கண்டனம்

இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலுக்கு பிரதமர் Justin Trudeau கண்டனம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல்களை கனடா சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது என பிரதமர் சனிக்கிழமை (13) தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள் மத்திய கிழக்கை பிராந்திய அளவிலான போருக்கு நெருக்கமாக தள்ளி வரும் நிலையில் பிரதமரின் இந்த கருத்து வெளியானது.

சனிக்கிழமையன்று இஸ்ரேலுக்குள் உள்ள இலக்குகளை நோக்கி ஈரான் ஏவுகணைகளை வீசியதாக ஈரானின் அரசு ஊடகம் அறிவித்ததை அடுத்து Justin Trudeauவின் கண்டன அறிக்கை வெளியானது.

இஸ்ரேல் மீது ஈரானின் முதல் நேரடி இராணுவத் தாக்குதல் இதுவாகும்.

இந்த தாக்குதல்கள் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மைக்கு ஈரானிய ஆட்சியின் அலட்சியத்தை மீண்டும் எடுத்துக் காட்டுவதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல்களில் இருந்து தன்னையும் அதன் மக்களையும் பாதுகாக்கும் இஸ்ரேலின் உரிமையை நாங்கள் ஆதரிக்கிறோம் எனவும் கனடிய பிரதமர் கூறினார்.

Related posts

கட்டுப்பாடுகளை மீறும் ஒன்று கூடல்கள் ஏமாற்றமளிக்கின்றன – நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

உக்ரைனுக்கு கனடா மேலும் $650 மில்லியன் உதவி

Lankathas Pathmanathan

Leave a Comment