தேசியம்
செய்திகள்

 Torontoவில் புதிய வெறுப்பு குற்ற விழிப்புணர்வு பிரச்சாரம் ஆரம்பம்!

Toronto காவல்துறையினர் புதிய வெறுப்பு குற்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆரம்பிக்கின்றனர்.

Crime Stoppers உடன் இணைந்து வெறுப்பு குற்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை காவல்துறையினர் ஆரம்பிக்கின்றனர்.

Toronto  நகரில் வெறுப்பு தொடர்பான சம்பவங்கள் உச்சம் அடைந்து வரும் நிலையில் இந்த பிரச்சாரம் ஆரம்பமாகிறது.

காவல்துறைக்கு  அல்லது அநாமதேயமாக வெறுப்பு குற்றங்களை புகார் அளிக்க மக்களை ஊக்குவிப்பது இந்த
பிரச்சாரத்தின் குறிக்கோளாகும் என தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் ஆரம்பித்த நாளில் இருந்து வெறுப்புக் குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக Toronto காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம்  ஆரம்பித்த October 7 ஆம் திகதி முதல், Toronto காவல்துறை 941 வெறுப்பு குற்ற அழைப்புகளுக்கு பதிலளித்துள்ளது.

அந்த அழைப்புகள் மூலம் 72 கைதுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், 182 குற்றச்சாட்டுகள் பதிவாகின.

அதேவேளை முஸ்லிம்களுக்கு எதிரான, அரேபிய எதிர்ப்பு, பாலஸ்தீன விரோத வெறுப்புக் குற்றங்கள் Toronto நகரில் அதிகரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Related posts

வாடகை குடியிருப்பாளர்களுக்கு $500 உதவித் தொகை!

Lankathas Pathmanathan

வாகன திருட்டு விசாரணை: 51 பேர் கைது. 215 வாகனங்கள் மீட்பு.

Lankathas Pathmanathan

Januaryயில் சில்லறை விற்பனை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment