தேசியம்
செய்திகள்

Regina Beach விமான நிலையம் அருகே அவசரமாக தரையிறங்கிய ஒன்றை இயந்திர விமானம்

Regina Beach விமான நிலையத்திற்கு அருகே விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கியது.

இதில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் – TSB – தெரிவித்துள்ளது

சனிக்கிழமை (06) இரவு Regina Beach அருகில் ஒன்றை இயந்திர விமானம் தரையிறங்கியது.

Regina Beach விமான நிலையத்தில் இந்த விமானத்தை தரையிறக்க விமானி முயன்றார்.

இருப்பினும், விமானம் ஓடு பாதையை கடந்து, அருகில் உள்ள மைதானத்தில் தரையிறங்கியது.

இதில் விமானத்தில் இருந்த மூன்று பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல்களைச் சேகரித்து வருவதாக TSB செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Related posts

குளிர் காலத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது: சுகாதார அமைச்சர் Christine Elliott 

Gaya Raja

ஆளுநர் நாயகத்திற்கு COVID தொற்று உறுதி

Lankathas Pathmanathan

மருத்துவ உதவியால் இறப்பதற்கான தகுதியை நீட்டிப்பதை தாமதப்படுத்தும் சட்டமூலம்

Lankathas Pathmanathan

Leave a Comment