February 22, 2025
தேசியம்
செய்திகள்

Hydro வெடிப்பின் காரணமாக இரண்டு தொழிலாளர்கள் காயம்

Hydro வெடிப்பின் காரணமாக இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்த சம்பவம் Torontoவில் நிகழ்ந்தது.

சனிக்கிழமை (06) அதிகாலை இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இதனால் அந்தப் பகுதியில் உள்ள 500 முதல் 1,000 வாடிக்கையாளர்கள் வரை மின்சாரம் இல்லாத நிலை தோன்றியுள்ளது.

சனிக்கிழமை அதிகாலை Hydro பெட்டகத்துக்குள் நிகழ்ந்த வெடிப்பு காரணமாக இந்த நிலை தோன்றியுள்ளது.

காயமடைந்த இரண்டு ஆண் தொழிலாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் ஒருவருக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், மற்றவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

Liberal தலைமைப் பதவிக்கு போட்டியிட போவதில்லை: Dominic LeBlanc

Lankathas Pathmanathan

Toronto நகரசபை உறுப்பினராக தெரிவானார் பார்த்தி கந்தவேள்

Lankathas Pathmanathan

போராட்டங்களின் ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக நஷ்ட ஈடு கோரி வழக்கு பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment