தேசியம்
செய்திகள்

Liberal கட்சியுடன் தொடர்ந்து செயல்படவுள்ள Anthony Housefather

நாடாளுமன்ற உறுப்பினர் Anthony Housefather தொடர்ந்து Liberal கட்சியுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளார்.

பிரதமர் Justin Trudeauவின் கட்சியில் தனக்கான இடம் குறித்த கேள்விக்கான சிந்தனையை முடித்துக் கொண்டுள்ளதாக வெள்ளிக்கிழமை (05) மாலை வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறினார்.

பாலஸ்தீனிய அரசை அங்கீகரிப்பது தொடர்பான NDP பிரேரணையை நாடாளுமன்றம் March 18ஆம் திகதி நிறைவேற்றியது.

இந்த பிரேரணை தனக்கும் யூத சமூகத்தில் உள்ள பலருக்கும் ஒரு அதிர்ச்சியாக இருந்தது என Anthony Housefather கூறியிருந்தார்.

இந்த பிரேரணையை Liberal கட்சி அங்கீகரித்ததால்,  தான் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்ததாக Anthony Housefather கூறியிருந்தார்.

இந்த பிரேரணை தொடர்பாக தனது தொகுதி வாக்காளர்களிடம் இருந்து கருத்துக்களை பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

இறுதியில் Liberal கட்சியுடன் தொடர்ந்து இணைந்து செயல்படுவது சிறந்தது என முடிவு செய்ததாகவும் Quebec மாகாண நாடாளுமன்ற உறுப்பினரான  Anthony Housefather கூறினார்.

Related posts

Toronto பெரும்பாக சந்தேக நபருக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டுகள்

Lankathas Pathmanathan

Ontario Liberal கட்சியின் இடைக்காலத் தலைவராக John Fraser தெரிவு

Lankathas Pathmanathan

இலங்கை குடும்பத்தின் இறுதிச் சடங்கில் இரக்கத்திற்கான வேண்டுகோள்

Lankathas Pathmanathan

Leave a Comment