தேசியம்
செய்திகள்

Brian Mulroney கனடிய அரசியலின் ‘சிங்கம்’ !

கனடிய அரசியலின் ‘சிங்கம்’ என Brian Mulroney நாடாளுமன்ற உறுப்பினர்களின் அஞ்சலியில் நினைவு கூறப்பட்டார்.

முன்னாள் பிரதமர் Brian Mulroneyனிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் திங்கட்கிழமை (18) அஞ்சலி செலுத்தினர்.

கடந்த மாதம் தனது 84 வயதில் இறந்த Brian Mulroney “கனடிய அரசியல் சிங்கங்களில் ஒருவராக” நினைவு கூறப்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் திங்கட்கிழமை Brian Mulroneyக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.

திங்கட்கிழமை Brian Mulroneyயின் துணைவி, நான்கு பிள்ளைகள் நாடாளுமன்ற பார்வையாளர் பகுதியில் இருந்து இந்த அஞ்சலி நிகழ்வை பார்வையிட்டனர்.

Brian Mulroneyயை ஒரு சிறந்த வழிகாட்டி என பிரதமர் Justin Trudeau நினைவு கூர்ந்தார்.

“அவரது கொள்கைகள் இந்த தேசத்தையும் உலகையும் சிறப்பாக வடிவமைக்க உதவியது” என Justin Trudeau தனது அஞ்சலியில் குறிப்பிட்டார்

Conservative தலைவர் Pierre Poilievre, NDP தலைவர் Jagmeet Singh, பசுமைக் கட்சி தலைவர் Elizabeth May ஆகியோரும் அஞ்சலி உரையாற்றினர்.

Brian Mulroneyக்கு அரச முறையில் இறுதிச் சடங்கு March மாதம் 23ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

Related posts

Conservative கட்சி விமர்சகர்கள் பதவியில் மாற்றங்கள்

Lankathas Pathmanathan

Ontario Liberal கட்சி தலைவர் அடுத்த வாரம் தெரிவு

Lankathas Pathmanathan

எரிவாயு, எரிபொருள் வரிகளை குறைக்கும் சட்டமூலம் Ontarioவில்

Lankathas Pathmanathan

Leave a Comment