February 23, 2025
தேசியம்
செய்திகள்

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க கோரும் பிரேரணை நிறைவேறியது

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க கோரும் NDP பிரேரணை கனடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க கனடிய அரசாங்கத்தை கோரும் புதிய ஜனநாயகக் கட்சியின் பிரேரணை திங்கட்கிழமை (18) நிறைவேற்றப்பட்டது.

பிணைப்பு இல்லாத ஆனால் குறியீட்டான NDP பிரேரணை இறுதியில் 204 க்கு 117 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேறியது.

பிரதமர் Justin Trudeau உட்பட ஏறத்தாள அனைத்து Liberal நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

NDP, Bloc Quebecois, பசுமை கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

Conservative தலைவர் Pierre Poilievre உட்பட அவரது கட்சி பிரேரணைக்கு எதிராக வாக்களித்தது.

இந்த பிரேரணையை நிறைவேற்றியதன் மூலம் கனடா உலகிற்கு ஒரு வலுவான செய்தியை வெளியிடுகிறது என  வெளியுறவு அமைச்சர் Melanie Joly தெரிவித்தார்.

Related posts

கனேடியர்கள் எகிப்து வழியாக காசாவை விட்டு வெளியேறும் திட்டம் இரத்து!

Lankathas Pathmanathan

வீதி விபத்தில் OPP அதிகாரி உட்பட இருவர் மரணம்

Lankathas Pathmanathan

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் Jim Karygiannis!

Lankathas Pathmanathan

Leave a Comment