February 23, 2025
தேசியம்
செய்திகள்

ஆறு இலங்கையர்களின் இறுதி சடங்கு ஞாயிறு மாலை ஆரம்பம்

தலைநகர் Ottawaவில் பலியான 6 இலங்கையர்களின் இறுதி சடங்கு ஞாயிற்றுக்கிழமை (17) பிற்பகல் நடைபெறுகிறது.

Ottawa நகர வரலாற்றில் மிகப்பெரிய கொலையில் பலியான ஆறு பேரை கௌரவிக்கும் பொது இறுதி ஊர்வலம் ஞாயிறு மதியம் 1 மணிக்கு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தர்ஷனி பண்டாரநாயக்கா, அவரது நான்கு பிள்ளைகள், குடும்ப நண்பரான காமினி அமரகோன் ஆகியோரின் இறுதிச் சடங்குகள் ஞாயிறு பிற்பகல் நடைபெறுகிறது.

சர்வமத பிரார்த்தனைகளுடன் இந்த இறுதிச் சடங்கு நடைபெறும் என கனடா பௌத்த பேரவை தெரிவித்தது .

Ottawa புறநகர் பகுதியில் 35 வயதான தர்ஷனி பண்டாரநாயக்கா, 7 வயதான இனுக்கா விக்கிரமசிங்க, 4 வயதான அஷ்வினி விக்கிரமசிங்க, 2 வயதான றினாயனா விக்கிரமசிங்க, இரண்டரை மாத கெலி விக்கிரமசிங்க, 40 வயதான காமினி அமரகோன் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் கடும் காயங்களுடன் உயிர் பிழைத்த தந்தை இறுதி சடங்கில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மரணமடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலரும் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து கனடா வந்தடைந்துள்ளதாக கனடாவிற்கான இலங்கைத் துணை உயர் ஆணையர் அன்சுல்  ஜான் தேசியத்திடம் தெரிவித்தார்.

இந்த கொலைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 19 வயதான Febrio De-Zoysa கைது செய்யப்பட்டார்.

அவர் மீது 6 முதல்தர கொலை வழக்குகள், ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இவர் பாதுகாப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் Ewan Lyttle கூறினார்.

Febrio De-Zoysa மீண்டும் March 28ஆம் திகதி நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்.

இந்த கொலைகளுக்கான காரணத்தை காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை.

குற்றவாளிக்கு எதிரான குற்றங்கள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

வரவு செலவு திட்ட முன்னுரிமைகள்: நிதி அமைச்சர் Chrystia Freeland

Lankathas Pathmanathan

உக்ரேனியர்களை அழிக்க ரஷ்யா விரும்புகிறது: கனடிய நாடாளுமன்றத்தில் உக்ரேனிய ஜனாதிபதி

Lankathas Pathmanathan

Notwithstanding சட்டத்தை முன்னெச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டாம்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment