February 23, 2025
தேசியம்
செய்திகள்

அமைச்சர் Steven Guilbeault பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்!

கனடாவின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற அமைச்சர் – Minister of environment and climate change – பதவியில் இருந்து Steven Guilbeault நீக்கப்பட வேண்டும் என Alberta முதல்வர் Danielle Smith கோரியுள்ளார்.

கனடிய பிரதமர் Justin Trudeau, Alberta முதல்வர் Danielle Smith ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு புதன்கிழமை (13) நடைபெற்றது.

கடந்த கோடை காலத்துக்குப் பின்னர் இரு தலைவர்களும் முதல் முறையாக Calgary நகரில் சந்தித்துப் பேசினர்.

கனடாவின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற அமைச்சர் பதவியில் இருந்து Steven Guilbeault  நீக்கப்பட்டால்  கனடிய அரசாங்கத்துடன் Alberta மாகாணத்தின் உறவை மேம்படுத்த முடியும் என தான் நம்புவதாக இந்த சந்திப்பில்  Alberta முதல்வர் Danielle Smith கோரினார்.

Carbon வரி உயர்வை இடைநிறுத்துமாறு மாகாண முதல்வர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்குமாறு Alberta முதல்வர் கனடிய பிரதமரிடம் வலியுறுத்தினார்.

Related posts

Ontarioவில் 11 ஆயிரம் பேர் தொடர்ந்தும் மின்சாரம் இல்லாத நிலையில்

Lankathas Pathmanathan

Winnipeg காவல்துறையால் மாணவர் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan

Ontario மேன்முறையீட்டு நீதிமன்றம் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச் சட்டத்தை உறுதி செய்தது!

Lankathas Pathmanathan

Leave a Comment