December 12, 2024
தேசியம்
செய்திகள்

சீனாவில் தடுத்து வைக்கப்பட்ட கனடியருக்கு கனடிய அரசு $7 மில்லியன் தீர்வு?

சீனாவில் தடுத்து வைக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசாங்கத்துடன் கனடிய ஒருவர் தீர்வை எட்டியுள்ளார்.

Michael Spavor சீனாவில் தடுத்து வைக்கப்பட்டது தொடர்பாக கனடிய அரசாங்கத்துடன் ஒரு தீர்வை எட்டியுள்ளார்.

இந்த தீர்வின் மொத்த தொகை 7 மில்லியன் டொலர் என தெரிய வருகிறது

Michael Spavorருக்கும் கனடிய அரசாங்கத்துக்கும் இடையில் தீர்வு எட்டப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் கூறினார்.

ஆனாலும் இந்த தீர்வு குறித்த மேலதிக விபரங்கள் எதையும் அவர் வெளியிடவில்லை

2018 இல் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கனடியர்களில் Michael Spavor ஒருவராவார்.

தூதரக அதிகாரி Michael Kovrig உடன் September 2021 இல் விடுவிக்கப்படும் வரை Michael Spavor 1,000 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தார்.

Related posts

Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் மேலும் பல புதிய வேட்பாளர்கள்

வாகன விபத்தில் மரணமடைந்த RCMP அதிகாரியின் இறுதி சடங்கு

$48 மில்லியன் வெற்றி பெற்ற பல்கலைக்கழக மாணவி

Lankathas Pathmanathan

Leave a Comment