தேசியம்
செய்திகள்

B.C. NDP அரசாங்கத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் விலகல்

புதிய ஜனநாயக கட்சியின் அரசாங்கத்தில் இருந்து முன்னாள் British Columbia அமைச்சர் புதன்கிழமை (06) விலகினார்.

முன்னாள் அமைச்சர் Selina Robinson இந்த முடிவை அறிவித்தார்.

கட்சியில் உள்ள மதவெறியை காரணம் காட்டி  இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்

யூதரான Selina Robinson, தொடர்ந்து அரசாங்கத்தில் நீடிக்க முடியாது என கூறினார்

NDP அரசாங்கம் மாகாணத்திலோ அல்லது அரசாங்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் மத்தியிலோ யூத விரோத நகர்வுகளை சரியாகக் கையாளவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.

ஆளும் கட்சியில் ஒரு யூதப் பெண்ணாக ஆதரவற்றவராக உணர்ந்ததாக அவர் கூறினார்

சுயேட்சை உறுப்பினராக செயற்படவுள்ளதாக அவர் கூறினார்

எதிர்வரும் October மாதம் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனக் கூறி ஓய்வு பெறுவதாக அவர் முன்னதாக அறிவித்திருந்தார்.

Selina Robinson கடந்த மாதம் அமைச்சர் பதவியில் இருந்து விலகியிருந்தார்

British Columbia முதல்வரும், புதிய ஜனநாயக கட்சியின் தலைவருமான David Eby இனவெறிக்கு எதிரான முன் முயற்சிகளின் உறுதியான ஆதரவாளர் என NDP கட்சி தெரிவித்தது.

முதல்வர் David Eby, யூத விரோதத்தை தொடர்ந்து கண்டித்து வருபவர் எனவும் அவரது கட்சி கூறியது.

Related posts

London வாகனத் தாக்குதல் சந்தேக நபர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய கோரிக்கை

Gaya Raja

Toronto நகர முதல்வராக July 12 பதவி ஏற்கும் Olivia Chow

Lankathas Pathmanathan

மீண்டும் இடைத் தேர்தல் சவாலை எதிர்கொள்ளும் Justin Trudeau?

Lankathas Pathmanathan

Leave a Comment